Skip to main content

Posts

Showing posts from December, 2011

நம்பிக்கையோடு

மாதம் பத்து தனிமையில் கடத்தினேன் ஓர் இருட்டறையில் வருடம் பத்து கடத்தினேன் நீ அமைத்து கொடுத்த கருவறையில் பச்சை மரங்களும் பசுமை புல்களும் நிறைய என்னை சுற்றி பாசத்தோடு அணைத்து கொள்ள பிள்ளை இல்லை என்னருகே உன்னை வளர்க்கும் காலம் தன்னில் ஓய்வு சற்றே தேவை பட்டது ஊதியத்தோடு ஓய்வு கிடைக்கும் போது வளர்த்த பிள்ளை இல்லையே நிலா காட்டி பாலமுதம் ஊட்டிய நாட்களை பொரித்தேன் என் மனதில் இனிமையாய் இருக்கிறது விருந்து இங்கே-ஆனால் நான் பார்த்து வளர்த்த நிலா எங்கே உன்னை குளிரும் வெயிலும் படாமல் பொத்தி பொத்தி வளர்த்தேன் கண்ணே குளிரும் இல்லை வெயிலும் இல்லை உன் அரவணைப்பும் இல்லை இங்கே அன்று சங்கீத மேதைகள் எல்லாம் சேர்ந்தாலும் உன் கிள்ளை மொழியிற்கு ஈடகவில்லை அதனை கேட்டு பழகிய என் செவிகள் சோர்ந்து கிடக்கின்றன இன்று வரை தென்னையின் மேல் நல்பிக்கை வேய் என்று பழைய மொழிகள் நிறைய சொல்லும் நான் வளர்த்த செல்வமே காத்திருக்கிறேன் இங்கே உனக்காக

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க