Skip to main content

Posts

ராதிகா தவ விரஹே

விரக தாபம் வாட்டுதே - உன்தன் நிழல் இன்றி இம்மரம் வாடுதே உன் பார்வை அணைத்த இத்தேகம் - உன்தன்  இதழ் அமுதின்றி காயுதே மண்ணில் எழுதிய உன் பெயர் காற்றில் எழுதியதார் போல் கரையுதே - என் உள்ளில் நான் எழுதிய உன் பெயர் பசுமரத்தாணி போல் ஊருதே துணை இன்றி ஆடுகிறேன் தனிமை சூறாவளியில் இலையுதிர் காலம் போல் நான் கிளை நுணியில் காய்ந்து சருகாகி உயிர் மரிக்க துணிவேனோ விழுந்தாலும் உன் காலடி அன்றி வேறேதோ நீரில் விழுந்த எரும்பானேன் என்னை கரையேற்றும் சருகவாயா விரக முதலையின் வாயில் கஜம் நானோ என்னை காக்கும் கஜேந்திரன் ஆவாயோ என்ன பாவம் இப்பிறவியை பெறச்செய்தேனோ உன்னை விட கருணை கொண்டவன் தருமனோ உன் கரம் தழுவிய இத்தேகம் உன் விரல் தொட நாடுதே சலனம் இல்லா தனிமை சாகரம் தோணியை வருவாய் கரை ஏற்ற தனிமையில் மறக்கிறேன் என்னிலை ஆவேன் என் நிலை அறியாயோ வேல் விழி மண்ணா!
Recent posts

பூவை சுமக்கும் சாணம்

பொங்கி வரும் உள்ள அலைகளை வடிக்க விழையும் தருணந்தநில் சினங்காக்க முடியாது கிழித்து எறிகிறேன் காகிதத்தை நட்பு காதல் பாசமெல்லாம் கதைகளில் கேட்ட கருமங்களே கனவு கலையும் வேளையில் உண்மை காலடி தரம் பெறாது காதல் சுகம் பொறுத்தது காலம் மாற காதலும் மாறும் பாசம் இதம் பொறுத்தது பாதை மாற பாசமும் மாறும் நட்பு நம்பிக்கை பொறுத்தது நடத்தை மாற நட்பும் மாறும் நம்பிக்கை என்னை பொறுத்தது மரியாதை இருக்கும் வறை அடித்தடமாம் அன்பு இம்மூவுணர்ச்சிகளுக்கும் சுய நலம் கொண்ட அன்பு தரம் கெட்டதென்பேன் நான் சுகம் கண்டு ஓடுகின்ற அன்பையும் பாசம் கொண்டு பின்னே ஓடிவரும் அன்பையும் ஒப்புமை பார்க்க தராசில் வைத்தால் விழுந்து அடிபடுவது ஓடிவரும் அன்பே விழுந்து எழுந்து சுதார்ச்சித்தாலும் கண்ணை மூடி ஓடத்துடங்குமே ஓடுகின்ற அன்பும் ஒருதலை ஓடிவரும் அன்புதானோ ஒன்றன் பின் ஒன்றாய் மந்தை போல் சுற்றி சுற்றி வட்டமாய் விழுந்து எழும் மந்தைதான் இந்த அன்பு சுற்றுவதை நிருத்தி பின்னே திரும்பிப் பார்த்தால் தெரியும் பூவை சுமக்கும் சாணத்தின் வாசனை

தனிப்பயணம்

அன்றொரு நாள் மாலை பொழுது என்னை மறந்து தென்றல் காற்றில் நானும் நடந்தேன் கடற்கரையோரம் என் வாழ்க்கை போகும் பாதையை ஆவல் பெருக்கின் உச்சத்தில் பார்க்க நினைத்தேன் நானும் சற்றே என் கால்களை மெல்ல தூக்கி மறையும் சூரிய காவி கதிர்கள் மாறியது இருட்கதிர்களாய் மேனியை மெல்லியதாய் தொட்ட தென்றலும் புயலாய் மாறியது நாவரண்டு நீரோடியது என் நெற்றியில் பாய்ந்தது முதுகு தண்டில் மின்சாரம் அச்சம் இருளையும் காட்டி வேகமாய் என்னை ஆகொண்டது தூரத்தில் ஓர் ஒளி வட்டம் – என்னை ஓட ஊன்றியது அதனை நோக்கி போகும் பாதையெல்லாம் கேட்டது அழுகையின் ஓலங்கள் பெற்றார் உற்றார் நண்பர்கள் வாழ்வில் நான் கண்ட முகங்கள் யாவையும் ஓடும் வழிதனிலே கண்டேன் பிம்பங்களாய் ஓடினேன் வேகமாய் இருளை கண்டு ஓடினேன் வேகமாய் அழுகையை கேட்டு ஓடினேன் வேகமாய் பிம்பங்களை கண்டு ஓடினேன் அச்சத்தின் உச்சத்தில் தூர கண்ட வெண் ஒளி பெரியதாய் பெரியதாய் வளர்ந்தது அடைந்தேன் அவ்விடத்தை படர்ந்தது ஒளி என்னை சுற்றி சிரித்தேன் அழுதேன் அந்த ஒரு நிமிடம் இடம் புரியா இன்பம் அது பயம் மறைந்த நிமிட

அபூர்வ உறவு

ஓர் ஆணின் வாழ்வில் எத்தனையோ உறவுகள் அன்னை தந்தை மனைவி மக்கள் எல்லார்க்கும் வாழ்வில் கிட்டாது தங்கை என்னும் ஓர் பெண்ணின் உறவு தங்கை இல்லாதவன் துர்பாக்கியசாலியோ சொல்ல தெரியவில்லை எத்தனை வகையாக பாசத்தை பிரித்தாலும் அண்ணன் தங்கை பாசம் உயிருடன் பின்றிய உறவு சொல்ல தெரியவில்லை கடற்கரையில் அவள் கட்டிய மணல் வீடு சரிந்தால் அண்ணன் மனம் சரிவதேன் சொல்ல தெரியவில்லை மணம் ஆகி புது வீடு புகும் அவளை உன் வீடு இனி அதுவே என்று அண்ணன் மணம் கண்ணீர் மறைத்து வழி அனுப்பிவிடுமே - சொல்ல தெரியவில்லை தங்கையின் காதலனோ தந்தை கூட பொருட்டல்ல - அவள் அண்ணனை கண்டு நடுங்குவதேன் சொல்ல தெரியவில்லை அண்ணன் தங்கை இருவரும் இரு தனி குடும்பங்கள் ஆகியும் இவள் அண்ணன் வீடு வரும் நாளோ என்றும் திருவிழாதானே கறுப்பை ஒன்றை பகிர்ந்த உறவு பாச கோடி ஒன்றை பகிரும் இரவு இவள் என்றுமே அண்ணனின் குல தெய்வம் இவன் என்றுமே தங்கையின் தகப்பன் சாமி

தோல்வி

விவரம் தெரிய வயது மிட்டாய் திங்க ஆசை மிட்டாய் தின்றால் சக்கரை வியாதி என்று கறிகாய் திங்க வெய்தாய் வளர்ந்து வரும் வயது தெருவில் விளையாட ஆசை தெருவில் விளையாடினால் அடி படும் என்று வீட்டினுள்ளே பிடித்து வெய்தாய் பருவம் அடைந்த பிறகு நண்பர் கூடம் ஆசை சேர்வார் சரி இல்லை என்றால் ? - என்று உலகம் தெரியாது மறைத்தாய் பொறியியல் படிக்க ஆசை புவியியல் பிடிக்கவில்லை இருட்டான பாதையை காட்டி அறிவியல் இதுவே என்றாய் வெட்டி வைத்த பாத்தியில் நீர் ஓடி வருவது போல நீ காண்பித்த வழியில் மறுக்காது ஓடினேன் நீ காண்பித்த வழி என்றும் என் நன்மைக்கே நீ காண்பித்த வழி என்றும் நலமே நீ காண்பித்த வழி என்றும் பத்திரமாய் இருந்தது நீ காண்பித்த வழி நான் விரும்பியது அல்லவே பாசம் அதிகம் என் மேல் உனக்கு எனக்கு எது நல்வழியோ காண்பித்து கொடுத்தாய் ஒரு முறையாவது என் வழியில் என்னை விட்டு உலகம் அறிய வாய்ப்பில்லையே உலகம் அரியது இப்போது தோல்வி சந்திக்க தெரியவில்லை தென்றலுக்கே சுழன்று விழும் உரம் இல்லா விதை ஆனேனே தட்டு தடுமாறி தேர்ந்து வர சாய் தோள் தேடும் என் உள்ளம் ஆழம் இல்லா பள்ளத்திலிருந்து

வேரோடு கிள்ளி எறிவதேனோ??

அடர்ந்த மரங்கள் நடுவில் தென்றல் புகுந்து செல்வதுபோல் துளைக்க முடியாத என் இதயத்தில் நீ புகுந்து சென்றாயே வறண்ட நிலத்தில் ஒரு துளி நீர் பெய்தாற்போல் யாரும் அமரா என் இதயத்தில் நீ இளைப்பாறி சென்றாயே பருகியது என் விதை அந்த ஓர் துளியை வளர்ந்தது என் வேர் அந்த ஓர் துளியில் முளைத்த கன்றை துளிர்க்க விடாது வேரோடு கிள்ளி எறிவதேனோ

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ