Skip to main content

Posts

Showing posts from May, 2011

முதுமை

முதுமை - வாழ்க்கையின் கேட்க்கா வரம் முதுமையில் தனிமை - வரம் என்னும் சாபம்   ஊமை பகலும் தனிமை இரவும் கடக்கும் தெம்பு உடலில் இல்லை ஊணும் வற்றி ரத்தம் சுண்டி சுமக்கும் வலுவும் மனதில் இல்லை முழங்கை மெதுவாய் மேலெழுப்பும் சத்து உடலில் குறைவு தான் இருப்பிலிருந்து மேலெழ பிடிப்பு ஒன்று தேவை தான் கூடி வாழ்ந்த காலத்தை நினைவு கூறும் தனிமை இது ஓடி ஆடிய நாட்களை நினைத்து பார்க்கும் வயது இது மௌனம் சூழும் நிமிடம் எல்லாம் மனதில் எதிர் ஒலிக்கும் சத்தங்கள் நாள் முழுவதும் நீடித்தாலும் பகலும் இறவென்று சாதிக்குமே உடல் வலியை போக்கவா மன வலியை ஆற்றவா யோசித்து கொண்டே நகருகையில் கண்களும் கசியுமே !!

இடம் புரியா இன்பம்

காதல் வாழ்வின் நீரோட்டம் பூவேந்தும் வேர் வாழ்க்கை ஆகின் மலர்ந்து சிரிக்கும் ரோஜா காதல் கடற்கரை மணல் வாழ்கை ஆகின் மெல்ல  உடல் தொடும் காற்று காதல் குளிர் நடுக்கும் இரவு வாழ்கை ஆகின் கம்பளியின் சுகம் காதல் கண்ணீர் மொத்தமும் வாழ்கை ஆகின் அதிலும்  ஆனந்த கண்ணீர் காதல் உலகம் முழுவதும் வாழ்கை ஆகின் அதில் நீயும் நானும் காதல்

யாரோ நீ???

ஒரே கருப்பையை பகிராத பாசமலர்கள் நாம் ஒன்றாய் ஆட்டம் பாட்டம் ஆரவாரம் செய்யாத நண்பர்கள் நாம் ஒரே வகுப்பில் மேஜை பகிராத மாணவர்கள் நாம் ஒன்றாய்  நேரம் பகிராத உறவினர் நாம் சேர்ந்து பிடி சோறு தின்ற இரவுகள் சேர்ந்து கை பிடித்து நடந்த பாதைகள் பகிர்ந்த  நினைவுகள் மலர்ந்த உறவுகள் கடல் தாண்டி நீ வசித்தாலும் எங்கே நீ என்று தேடி வரும் உணர்வுகள் என் இன்பமும் துன்பமும் முகம் கண்ட உடன் அறியும் திறமைசாலி என்னை தட்டி கொடுக்கும் தன்னம்பிக்கை ஊற்றே உன்னுடன் ப்ஹேஸ்புக் நட்பு கொள்ள என்ன தவம் செய்தேனோ.....

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.

முதலும் முடிவும் எங்கே???

வாழ்க்கையில் அன்பை தேடும் நிறைய இதயம் உண்டு பிறர் அன்பை தேடும் பொழுது தன்  அன்பிர்கும் ஏங்கும் ஓர் இதயம் பின்னால் இருப்பது தெரியாது அவர் அவர் சுயநலம் தான் முன்னே நிற்கிறது அன்பை தேடும் இதயம் - தன்னிடம் எதிர் பார்க்கும் இதயத்தை மறப்பதேனோ??? இந்த சுழலின் முதலும் தான் முடிவும் எதுவோ??

அன்பு காதலே ஆசையில் ஓர் கடிதம்

என்னை கரை ஏற்றிய காதலே என்ன இரையாக்கிக் கொல்லாதே உன் நினைவுகள் என்னை சுற்றும் நேரம் நீ மாற்றான் காதலியான தருணம் உன் மேல் வந்த அன்பு காதலின் உச்சம் - நட்பில்லை கண்ணே உன்னை தோழியாய் பார்க்கும் நேரமெல்லாம் புதைக்கிறேன் என் காதலை – உனக்காக உனக்கும்   உண்டு இதயம் இல்லாவிடில் வருமா காதல் ஆனால் எனக்கு வரவில்லையே மனது என் காதலை மறக்க என் நட்பை இழக்க பதருகிறேன் காதலை புரிய வெயக்க துடிக்கிறேன் என் காதலை அழித்து நம் நட்பை காக்கவா நம் நட்பை புதைத்து என் காதலை போற்றவா ???      பதிலுக்காக காத்திருக்கும்                                                                        நண்பன் என்னும் காதலன்

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

எது நிலை??

வானவில் தோரணங்கள் தேனமுது கீதங்கள் கை நிறைக்கும் பொன்னும் மனம் நிறைக்கும் பொருளும் வாய் நிறைக்கும் உணவும் இடம்  நிறைக்கும் உறவும் என்றும் நிலையல்ல! பாறை வழியும் முட் பயணனும் துயர் இருளும் தனிமை அறையும் வற்றும் பசியும் உருக்கும் தாபமும் உறுத்தும் மன கணங்களும் என்றும் நிலையல்ல! இந்த நிமிடம் உண்டு இந்த நொடி உண்டு மனம் நினைப்பது உண்மை மற்றவரிடம்  எதிர் பார்ப்பது மடமை நிலைப்பது  சில அவற்றுள் உணர்வுகள் நினைவுகள் பிரதானம் வாழ்கை முழுவதையும் யோசித்து மலைத்து சிரமப் படுவதை விட இந்த நொடியை மட்டும் வாழ்ந்து இன்பப்படுவது மேல்... அத்தனைக்கும் ஆசை படலாம் ஆனால் அவை நிலைப்பது கடினம்

தேவையா??

தெருவெல்லாம் மினு மினு மின் விளக்குகள் வழியெல்லாம் சர சர மின்னொளிகள் மின்சார தடை மீட்க கோரும் கூட்டத்திற்கு

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை

அடுத்து என்ன??

கடிகார முட்கள் இரண்டும் இன்று போட்டி போட்டு ஓடியது வகுப்பறையில்  மட்டும் ஏனோ இந்த ஆமை வேகம் பரிட்சைக்கு முன் இரவு என் எழுத்தரையில் மடி  கணினியில் காண்கிறேன் படுக்கை அறையில் உயிர்  குறில் இரண்டும் என் தலையில் வல்லின மெய்யோடு சேர்வது நான் என்று வாக்கு வாதம் செய்ய இறுதியில் உகரம் ஜெயித்தது- செல்கிறேன் படுக்க

தேவதை

வான் மேக கூட்டங்கள் பாதை அமைக்க நீ தரை இரங்கி வர உன் மனம் இசைக்க மழை துளி யாவும் உன்னை வலிக்காமல் நனைக்க உன் தலை துடைக்க என் வாசல் தேடி நடக்க என்ன தவம் நான் செய்தேன் பேரழகே மின்னல் வெட்டும் உன் புருவம் அசைந்தால் வானம் இடிக்கும் நீ முகம் சுலிதால் மழை தாளம் போடும் உன் கண் ராகத்தோடு பாடினால் நானும் ஆடுகிரேன் உன் தேன் அமுத பேச்சினால் உன் கொஞ்சல் பேச்சு என்னை மலைக்க வைக்கிறது உன் மூச்சு என்னை சிலிர்க்க வைக்கிறது உன் காதல் வார்த்தை என்னை சுகிக்க வைக்கிறது உன் பார்வை ஒன்றே என்னை உயிர் வாழ வைக்கிறது ஏங்கே இருந்தாய் இத்தனை நாளாய் என்னை உலுக்காமல் என்ன செய்தாய் இத்தனை நாளாய் என்னை வதைகாமல் என்ன நினைத்தாய் இத்தனை நாளாய் என்னை அல்லாமல் என்றாவது யோசித்தாயா நான் என்ன செய்வேன் நீ இல்லாமல்??

காதல்

மேகத்தின் நடுவே தோன்றும் மின்னல் நீயோ வானத்தின் நடுவே தொன்றுண் நட்சத்திரம் நீயோ தேகத்தின் நடுவேதோன்றும் உணர்வுகள் நீயோ என்  உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் காதலே

உனக்காக

முதல் எழுத்தரை என் முதல் முத்திரை இதை வரையும் பொழுது வரும் உணர்வு தப்பென்ற பொழுது தலையில் குட்டாமல் என் முதுகில் தட்டி கொடுத்த தேற்றிய பெண்ணே என் எழுத்துக்களின் சேரிடம் நீயன்றோ பொறுமையாய்  பாடம் நடத்தியவளே இதோ உன் பாதத்திற்கு என் முதல் கவிதை