Skip to main content

Posts

Showing posts from 2013

வேரோடு கிள்ளி எறிவதேனோ??

அடர்ந்த மரங்கள் நடுவில் தென்றல் புகுந்து செல்வதுபோல் துளைக்க முடியாத என் இதயத்தில் நீ புகுந்து சென்றாயே வறண்ட நிலத்தில் ஒரு துளி நீர் பெய்தாற்போல் யாரும் அமரா என் இதயத்தில் நீ இளைப்பாறி சென்றாயே பருகியது என் விதை அந்த ஓர் துளியை வளர்ந்தது என் வேர் அந்த ஓர் துளியில் முளைத்த கன்றை துளிர்க்க விடாது வேரோடு கிள்ளி எறிவதேனோ

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

தாயவள் ஆசை மடி

பத்தாயிரம் மயில் கற்கள் என்னையும் என் தாயையும்  பிரிக்கும் கடல் தாயவள் நீளம் காலமும் நேரமும் பிரித்தது எங்களை  என் சுயநலமும் ஓர் காரணம் பறந்தேன் இந்த  மக்கள் வசிக்கும்  பறந்து விரிந்த கண்டத்திற்கு  கண்டேன்  புது மனிதர்களை  பழகினேன் உறவுகளாய்  பாராட்டினேன் புது உறுவுகளை  அன்பு பெருகியது  உறவுகளிடம் எதிர் பார்ப்பு  என்னை பருகியது  பழக பழக பாலும் புளிக்கும் ஆண்டு ஒன்று கடந்தது  புளித்தது தண்ணீர் பருகவும்  புது நிலம் புது உறவுகள்  புது நிறங்கள்  உடைந்தது எதிர் பார்ப்புகள்  அவள் அன்பை பாராட்ட நேரம் கிடைத்ததில்லை  என் அன்பை பாராட்ட புது உறவுகளுக்கு நேரமில்லை  வசிக்க பிடிக்கவில்லை  வாழ இடமில்லை  போகவும் திக்கில்லை  அடைக்கலம் தந்த  புது உறவுகளுக்கு  நான் இன்றொரு பாரம்  அவர் அவர் விருப்ப தேர்வு மாறும்  பழைய விருப்பம் மாறும் அலை நீளம் மிகவும் மாறும் உடைந்த மனம்  தேடுகிறதே பெற்றவள் மடியினை அவளோ  பத்தாயிரம்  மயில் கற்கள் தூரம்  வசிக்கிறாள்  என்னை நினைத்து  என் நலத்தை நினைத்து 

தேடுகிறேன் (என்னுள்ளே)

உணர்வுகளை வெளிப்படுத்தும் இடம் - ஓர் உறவு ஈரைந்து மாதம் சுமந்தவளிடம் இதயத்தில் உள்ள யாவையும் சொல்வதரிது தகப்பன் சாமியிடம் வேண்டுவதிலேயே செல்லும் நேரம் சகோக்களிடம் சகஜமாய் பேச கோடொன்று உள்ளது உறவினர் இவர் வடை பிடுங்கும் நரிகள் நட்பு காதலை தேடும் காதல் நட்பை தேடும் இவ்விரு தண்டவாளத்தில் இடையில் உயிர் பிழைப்பது எளிதல்ல வேறெந்த உறவு அது உணர்வுகளை பகிர கண்ணீரை காய வைக்க உற்சாகத்தை மேலும் அதிகரிக்க தோள் தட்டி தூக்கிவிடும் அந்த உறவு எந்த உறவு?? தேடுகிறேன் (என்னுள்ளே)

காற்றில் மிதந்தேன்

காற்றில் மிதந்தேன் வானூர்தியில் கடல் தாண்டி காற்றில் மிதந்தேன் நான் விதைத்த ரோஜாவை பார்க்க காற்றில் மிதந்தேன் கடல் தாண்டி என் கண்மணியை காண காற்றில் மிதந்தேன் நான் சுமந்த உயிரை தழுவ கற்பணயில் கண்ட அந்த முகத்தை கனவில் கேட்ட அந்த குரலை நினைவில் கொண்ட அந்த புன்னகையில் காண மண்ணில் இறங்கினேன் அந்த முகம் அதே புன்னகை அதே மினுக்கும் கண்கள் மேலும் வளர்ந்த என் கன்று- இன்று சான்றோர் போற்றும் பூ சென்று சொல்ல தெரியா இன்பம் இதயம் கொள்ளாத மகிழ்ச்சி மடை திறந்ந்த வெள்ளம் போல் பொங்கி வரும் பாசம் அடக்க முடியாத கண்ணீர் செய்வதரியாது நின்றேன் அன்று புரியவில்லை அதன் அர்த்தம் ஈன்ற பொழுதின் இன்பம் இன்று உணர்ந்தேன் ஈன்ற பொழுதின் பெற்ற இன்பத்தினை கண்டேன் என்னுள் வளர்ந்த உயிரை காற்றில் மிதந்தேன்

குருடன்

காதலுக்கு கண்கள் இல்லை இது உருவகம் உணர்வுகள் பிறக்கும் மூளையும் குருடு இது உண்மை வாழ்க்கை படலம்-அதில் பலருக்கு உண்டு பாத்திரம் முடிவில்லா உணர்ச்சி கதையில் கணக்கில்லா உறவுகள் கணக்கில்லா கதாபாத்திரங்களும் தனக்கென இருக்கும் ஓர் படலத்தில் சொல்ல தெரியா உணர்ச்சிகளை மென்று தின்று விழுங்கும் அவ்வப்போது சங்கமிக்கும் இருவர் தடம் - இதில் தன் வழி மறந்து தடம் புரளும் சிலர் இதயம் பாதை பாதி கடப்பின் கேள்வி எழும் இது சரியா என முன்னே செல்லவும் முடியாது பின்னே வரவும் தெரியாது குருடனாய் அலையும் இதயம் அந்த பேராபத்தை தடுக்க படைத்தவனே நினைத்தாலும் போவானே கீழ்பாக்கம்

மாலை மங்கும் வேளை

மின்னல் வெட்டும் உன் பார்வை முன்னே மேகத்தின் நடுவில் எட்டிப் பார்க்கும் மின்னல்கள் சில்லென்று வீசும் உன் சுவாசம் முன்னே என் மேனியை உரசும் குளிர் காற்று அடர்ந்து பாயும் உன் கரு நீல கூந்தல் முன்னே படர்ந்து கிடக்கும் கரு மெகா கூட்டம் மயிர்கூச்சலிட செய்யும் உன் ஸ்பரிசம் முன்னே என்னை தீண்டும் சாரல் துளிகள் வேகமாய் கூடு அடையும் பறைவைகள் ஒதுங்குவது மழைக்கல்ல பூக்களை சுற்றும் வண்டுகள் ஓடுவது மழைக்கல்ல கார் கூந்தல் அழகை - உன் அலர்ந்த புன்சிரிப்பை இதமாய் வீசும் உன் சுவாசத்தை  ரசிக்க பதிக்க ஸ்பரிக்க துதிக்க – போட்டி போடுகின்றது மேல் சொன்ன அனைத்தும்

இந்த நிமிடம் உலகம் நின்றிடாதா

வாழ்கை புத்தகம் பக்கங்கள் கொஞ்சம் அதிலும் நற்பக்கங்கள் மிகவும் கொஞ்சம் மிக சிறந்த வாழ்நாட்கள் நிலைக்கும் சில நாட்களே அதனை உணர்ந்தேன் அப்பக்கம் திருப்பும் பொழுது எழுத துடிக்கும் கைகள் வார்த்தைகள் இல்லா தருணம் வெளியே வர மறுக்கும் கண்ணீர் நினைவுகளை புதயலாக்கும் இதயம் இந்த நிமிடம் உலகம் நின்றிடாதா !!