Skip to main content

Posts

Showing posts from 2011

நம்பிக்கையோடு

மாதம் பத்து தனிமையில் கடத்தினேன் ஓர் இருட்டறையில் வருடம் பத்து கடத்தினேன் நீ அமைத்து கொடுத்த கருவறையில் பச்சை மரங்களும் பசுமை புல்களும் நிறைய என்னை சுற்றி பாசத்தோடு அணைத்து கொள்ள பிள்ளை இல்லை என்னருகே உன்னை வளர்க்கும் காலம் தன்னில் ஓய்வு சற்றே தேவை பட்டது ஊதியத்தோடு ஓய்வு கிடைக்கும் போது வளர்த்த பிள்ளை இல்லையே நிலா காட்டி பாலமுதம் ஊட்டிய நாட்களை பொரித்தேன் என் மனதில் இனிமையாய் இருக்கிறது விருந்து இங்கே-ஆனால் நான் பார்த்து வளர்த்த நிலா எங்கே உன்னை குளிரும் வெயிலும் படாமல் பொத்தி பொத்தி வளர்த்தேன் கண்ணே குளிரும் இல்லை வெயிலும் இல்லை உன் அரவணைப்பும் இல்லை இங்கே அன்று சங்கீத மேதைகள் எல்லாம் சேர்ந்தாலும் உன் கிள்ளை மொழியிற்கு ஈடகவில்லை அதனை கேட்டு பழகிய என் செவிகள் சோர்ந்து கிடக்கின்றன இன்று வரை தென்னையின் மேல் நல்பிக்கை வேய் என்று பழைய மொழிகள் நிறைய சொல்லும் நான் வளர்த்த செல்வமே காத்திருக்கிறேன் இங்கே உனக்காக

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

மனப்போர்

சொற்க்களை அம்புகளாய் எய்து எண்ணங்களை கேடயமாய் வெய்து அன்பினை வாளாய் பிடித்து உணர்வுகளை காக்க போராடினேன் குருதி சிந்தி ஊண் சிதையும் களப்போரும் முடிவுக்கு வருமே கண்ணீர் சிந்தி உள்ளம் சிதையும் மனப்போர் வந்திடுமோ ஓர் முடிவிற்கு உள்ளத்தில் நடக்கும் போராட்டம் இது சிந்தனை சிதறும் கைகள் பதறும் வார்த்தை குளரும் உடலெங்கும் நடுங்கும் கண்களும் சுனை போல் ஆகும் கண்ணீர் சுரக்க தலை கணக்கும் சுயநலமும் உணர்ச்சிகளை மிதிக்கும் தலைகணமும் காதலை மதியாத உணர்ச்சிகளும் விட்டு கொடுக்க தெரியாத காதலும் போகுமே மண்ணிற்கு கீழே சிதைந்த உள்ளத்தின் அருகில் உருகுலைக்குமே இறந்தபின்னும் விடாது நிம்மதியாய் புதைய

காதல் நட்பு

நகமும் சதையும் எலும்பும் தோலும் நட்பின்  அடையாளம் இடையில் ஊடுருவும் குருதி காதல் நடுவில்  வெளி வந்து கவனங்களை திருப்பி பிரிக்க முடியாதவைகளை பிரித்து சீக்கிரம்  வற்றிவிடும் ஆனால் பிரிந்தவை சேர நாட்கள் ஆகும் சில நேரங்கள் சேராமலேபோகும்

தவிப்பு

தனிமையில் உன்னை நினைக்கும் நொடி தாகத்தில் வாடும் நாவிற்கு ஒரு தண்ணீர் துளி உன்னை எதிரிலே தள்ளி வெய்து பார்க்கும் நொடி கண்ணில் நீர் வழியாது குளம் கட்டும் தளும்பி மனஸ்தாபங்கள் ஆயிரம் இருபினும் மனம் தாபம் இல்லாமல் உடைத்த உள்ளத்தை ஒன்று திரட்டி அரவணைக்கும் அன்பை எதிர் பார்க்கும் உள்ளம் எத்தனை தழும்புகள் வாங்கினாலும் இன்னும் கொஞ்சம் இடம் இருக்கதா தழும்புகளை தாங்க என்று மனம் என்குவதேனோ வார்த்தைகளால் சொல்ல முடியாது சொல்லாமல் உனக்கு புரியாது நான் உன்னை நேசிப்பதை விட நீ இல்லாமல் தவிப்பதை

தவிப்பு

தனிமையில் உன்னை நினைக்கும் நொடி தாகத்தில் வாடும் நாவிற்கு ஒரு தண்ணீர் துளி உன்னை எதிரிலே தள்ளி வெய்து பார்க்கும் நொடி கண்ணில் நீர் வழியாது குளம் கட்டும் தளும்பி மனஸ்தாபங்கள் ஆயிரம் இருபினும் மனம் தாபம் இல்லாமல் உடைத்த உள்ளத்தை ஒன்று திரட்டி அரவணைக்கும் அன்பை எதிர் பார்க்கும் உள்ளம் எத்தனை தழும்புகள் வாங்கினாலும் இன்னும் கொஞ்சம் இடம் இருக்கதா தழும்புகளை தாங்க என்று மனம் என்குவதேனோ வார்த்தைகளால் சொல்ல முடியாது சொல்லாமல் உனக்கு புரியாது நான் உன்னை நேசிப்பதை விட நீ இல்லாமல் தவிப்பதை