Skip to main content

நம்பிக்கையோடு


மாதம் பத்து தனிமையில்
கடத்தினேன் ஓர் இருட்டறையில்
வருடம் பத்து கடத்தினேன்
நீ அமைத்து கொடுத்த கருவறையில்

பச்சை மரங்களும் பசுமை புல்களும்
நிறைய என்னை சுற்றி
பாசத்தோடு அணைத்து கொள்ள
பிள்ளை இல்லை என்னருகே

உன்னை வளர்க்கும் காலம் தன்னில்
ஓய்வு சற்றே தேவை பட்டது
ஊதியத்தோடு ஓய்வு கிடைக்கும் போது
வளர்த்த பிள்ளை இல்லையே

நிலா காட்டி பாலமுதம்
ஊட்டிய நாட்களை பொரித்தேன் என் மனதில்
இனிமையாய் இருக்கிறது விருந்து இங்கே-ஆனால்
நான் பார்த்து வளர்த்த நிலா எங்கே

உன்னை குளிரும் வெயிலும் படாமல்
பொத்தி பொத்தி வளர்த்தேன் கண்ணே
குளிரும் இல்லை வெயிலும் இல்லை
உன் அரவணைப்பும் இல்லை இங்கே

அன்று சங்கீத மேதைகள் எல்லாம் சேர்ந்தாலும்
உன் கிள்ளை மொழியிற்கு ஈடகவில்லை
அதனை கேட்டு பழகிய என் செவிகள்
சோர்ந்து கிடக்கின்றன இன்று வரை

தென்னையின் மேல் நல்பிக்கை வேய் என்று
பழைய மொழிகள் நிறைய சொல்லும்
நான் வளர்த்த செல்வமே
காத்திருக்கிறேன் இங்கே உனக்காக

Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை