பத்தாயிரம் மயில் கற்கள் என்னையும் என் தாயையும் பிரிக்கும் கடல் தாயவள் நீளம் காலமும் நேரமும் பிரித்தது எங்களை என் சுயநலமும் ஓர் காரணம் பறந்தேன் இந்த மக்கள் வசிக்கும் பறந்து விரிந்த கண்டத்திற்கு கண்டேன் புது மனிதர்களை பழகினேன் உறவுகளாய் பாராட்டினேன் புது உறுவுகளை அன்பு பெருகியது உறவுகளிடம் எதிர் பார்ப்பு என்னை பருகியது பழக பழக பாலும் புளிக்கும் ஆண்டு ஒன்று கடந்தது புளித்தது தண்ணீர் பருகவும் புது நிலம் புது உறவுகள் புது நிறங்கள் உடைந்தது எதிர் பார்ப்புகள் அவள் அன்பை பாராட்ட நேரம் கிடைத்ததில்லை என் அன்பை பாராட்ட புது உறவுகளுக்கு நேரமில்லை வசிக்க பிடிக்கவில்லை வாழ இடமில்லை போகவும் திக்கில்லை அடைக்கலம் தந்த புது உறவுகளுக்கு நான் இன்றொரு பாரம் அவர் அவர் விருப்ப தேர்வு மாறும் பழைய விருப்பம் மாறும் அலை நீளம் மிகவும் மாறும் உடைந்த மனம் தேடுகிறதே ...
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்