Skip to main content

தாயவள் ஆசை மடி

பத்தாயிரம் மயில் கற்கள்
என்னையும் என் தாயையும் 
பிரிக்கும் கடல் தாயவள் நீளம்

காலமும் நேரமும்
பிரித்தது எங்களை 
என் சுயநலமும் ஓர் காரணம்

பறந்தேன் இந்த 
மக்கள் வசிக்கும் 
பறந்து விரிந்த கண்டத்திற்கு 


கண்டேன்  புது மனிதர்களை 
பழகினேன் உறவுகளாய் 
பாராட்டினேன் புது உறுவுகளை 

அன்பு பெருகியது 
உறவுகளிடம் எதிர் பார்ப்பு 
என்னை பருகியது 

பழக பழக பாலும் புளிக்கும்
ஆண்டு ஒன்று கடந்தது 
புளித்தது தண்ணீர் பருகவும் 

புது நிலம்
புது உறவுகள் 
புது நிறங்கள் 

உடைந்தது எதிர் பார்ப்புகள் 
அவள் அன்பை பாராட்ட நேரம் கிடைத்ததில்லை 
என் அன்பை பாராட்ட புது உறவுகளுக்கு நேரமில்லை 

வசிக்க பிடிக்கவில்லை 
வாழ இடமில்லை 
போகவும் திக்கில்லை 

அடைக்கலம் தந்த 
புது உறவுகளுக்கு 
நான் இன்றொரு பாரம் 

அவர் அவர் விருப்ப தேர்வு மாறும் 
பழைய விருப்பம் மாறும்
அலை நீளம் மிகவும் மாறும்

உடைந்த மனம் 
தேடுகிறதே
பெற்றவள் மடியினை




அவளோ 
பத்தாயிரம் 
மயில் கற்கள் தூரம் 

வசிக்கிறாள் 
என்னை நினைத்து 
என் நலத்தை நினைத்து 

இறுக தழுவி 
கூவி அழ 
துடிக்கிறது நெஞ்சம்

என்னை விரும்பாத 
உறவுகளோடு 
தனிமையில் வாழும் நான்!

Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை