Skip to main content

தோல்வி

விவரம் தெரிய வயது
மிட்டாய் திங்க ஆசை
மிட்டாய் தின்றால் சக்கரை வியாதி என்று
கறிகாய் திங்க வெய்தாய்

வளர்ந்து வரும் வயது
தெருவில் விளையாட ஆசை
தெருவில் விளையாடினால் அடி படும் என்று
வீட்டினுள்ளே பிடித்து வெய்தாய்

பருவம் அடைந்த பிறகு
நண்பர் கூடம் ஆசை
சேர்வார் சரி இல்லை என்றால் ? - என்று
உலகம் தெரியாது மறைத்தாய்

பொறியியல் படிக்க ஆசை
புவியியல் பிடிக்கவில்லை
இருட்டான பாதையை காட்டி
அறிவியல் இதுவே என்றாய்

வெட்டி வைத்த பாத்தியில்
நீர் ஓடி வருவது போல
நீ காண்பித்த வழியில்
மறுக்காது ஓடினேன்

நீ காண்பித்த வழி
என்றும் என் நன்மைக்கே
நீ காண்பித்த வழி
என்றும் நலமே

நீ காண்பித்த வழி
என்றும் பத்திரமாய் இருந்தது
நீ காண்பித்த வழி
நான் விரும்பியது அல்லவே

பாசம் அதிகம் என் மேல் உனக்கு
எனக்கு எது நல்வழியோ காண்பித்து கொடுத்தாய்
ஒரு முறையாவது என் வழியில் என்னை விட்டு
உலகம் அறிய வாய்ப்பில்லையே

உலகம் அரியது இப்போது
தோல்வி சந்திக்க தெரியவில்லை
தென்றலுக்கே சுழன்று விழும்
உரம் இல்லா விதை ஆனேனே

தட்டு தடுமாறி தேர்ந்து வர
சாய் தோள் தேடும் என் உள்ளம்
ஆழம் இல்லா பள்ளத்திலிருந்து வெளி வர
ஏணி தர நீ இல்லையே

Comments

Popular posts from this blog

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.