Skip to main content

அபூர்வ உறவு

ஓர் ஆணின் வாழ்வில்
எத்தனையோ உறவுகள்
அன்னை தந்தை
மனைவி மக்கள்

எல்லார்க்கும் வாழ்வில் கிட்டாது
தங்கை என்னும் ஓர் பெண்ணின் உறவு
தங்கை இல்லாதவன் துர்பாக்கியசாலியோ
சொல்ல தெரியவில்லை

எத்தனை வகையாக பாசத்தை பிரித்தாலும்
அண்ணன் தங்கை பாசம்
உயிருடன் பின்றிய உறவு
சொல்ல தெரியவில்லை

கடற்கரையில் அவள் கட்டிய
மணல் வீடு சரிந்தால்
அண்ணன் மனம் சரிவதேன்
சொல்ல தெரியவில்லை

மணம் ஆகி புது வீடு புகும் அவளை
உன் வீடு இனி அதுவே என்று
அண்ணன் மணம் கண்ணீர் மறைத்து
வழி அனுப்பிவிடுமே - சொல்ல தெரியவில்லை

தங்கையின் காதலனோ
தந்தை கூட பொருட்டல்ல - அவள்
அண்ணனை கண்டு நடுங்குவதேன்
சொல்ல தெரியவில்லை

அண்ணன் தங்கை இருவரும்
இரு தனி குடும்பங்கள் ஆகியும்
இவள் அண்ணன் வீடு வரும் நாளோ
என்றும் திருவிழாதானே

கறுப்பை ஒன்றை பகிர்ந்த உறவு
பாச கோடி ஒன்றை பகிரும் இரவு
இவள் என்றுமே அண்ணனின் குல தெய்வம்
இவன் என்றுமே தங்கையின் தகப்பன் சாமி

Comments

Post a Comment

Popular posts from this blog

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.