Skip to main content

பூவை சுமக்கும் சாணம்

பொங்கி வரும் உள்ள அலைகளை
வடிக்க விழையும் தருணந்தநில்
சினங்காக்க முடியாது
கிழித்து எறிகிறேன் காகிதத்தை

நட்பு காதல் பாசமெல்லாம்
கதைகளில் கேட்ட கருமங்களே
கனவு கலையும் வேளையில்
உண்மை காலடி தரம் பெறாது

காதல் சுகம் பொறுத்தது
காலம் மாற காதலும் மாறும்
பாசம் இதம் பொறுத்தது
பாதை மாற பாசமும் மாறும்

நட்பு நம்பிக்கை பொறுத்தது
நடத்தை மாற நட்பும் மாறும்
நம்பிக்கை என்னை பொறுத்தது
மரியாதை இருக்கும் வறை

அடித்தடமாம் அன்பு
இம்மூவுணர்ச்சிகளுக்கும்
சுய நலம் கொண்ட அன்பு
தரம் கெட்டதென்பேன் நான்

சுகம் கண்டு ஓடுகின்ற அன்பையும்
பாசம் கொண்டு பின்னே ஓடிவரும் அன்பையும்
ஒப்புமை பார்க்க தராசில் வைத்தால்
விழுந்து அடிபடுவது ஓடிவரும் அன்பே

விழுந்து எழுந்து சுதார்ச்சித்தாலும்
கண்ணை மூடி ஓடத்துடங்குமே
ஓடுகின்ற அன்பும் ஒருதலை
ஓடிவரும் அன்புதானோ

ஒன்றன் பின் ஒன்றாய்
மந்தை போல் சுற்றி சுற்றி
வட்டமாய் விழுந்து எழும்
மந்தைதான் இந்த அன்பு

சுற்றுவதை நிருத்தி
பின்னே திரும்பிப் பார்த்தால்
தெரியும் பூவை சுமக்கும்
சாணத்தின் வாசனை

Comments

  1. Lovely, Vignesh. Thanks for sharing your words and thoughts with us. Keep writing, you have a real gift :)

    ReplyDelete
  2. இதில் சாணமாகிப்போனவர்கள் அதிகம், சாணம் பயன்படுவது போல் காய்ந்த பூக்கள் பயன் படுவது இல்லை.. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.