Skip to main content

தனிப்பயணம்


அன்றொரு நாள்
மாலை பொழுது
என்னை மறந்து தென்றல் காற்றில்
நானும் நடந்தேன் கடற்கரையோரம்

என் வாழ்க்கை போகும் பாதையை
ஆவல் பெருக்கின் உச்சத்தில்
பார்க்க நினைத்தேன் நானும் சற்றே
என் கால்களை மெல்ல தூக்கி

மறையும் சூரிய காவி கதிர்கள்
மாறியது இருட்கதிர்களாய்
மேனியை மெல்லியதாய் தொட்ட
தென்றலும் புயலாய் மாறியது

நாவரண்டு நீரோடியது என் நெற்றியில்
பாய்ந்தது முதுகு தண்டில் மின்சாரம்
அச்சம் இருளையும் காட்டி
வேகமாய் என்னை ஆகொண்டது

தூரத்தில் ஓர் ஒளி வட்டம் – என்னை
ஓட ஊன்றியது அதனை நோக்கி
போகும் பாதையெல்லாம்
கேட்டது அழுகையின் ஓலங்கள்

பெற்றார் உற்றார் நண்பர்கள்
வாழ்வில் நான் கண்ட முகங்கள்
யாவையும் ஓடும் வழிதனிலே
கண்டேன் பிம்பங்களாய்

ஓடினேன் வேகமாய் இருளை கண்டு
ஓடினேன் வேகமாய் அழுகையை கேட்டு
ஓடினேன் வேகமாய் பிம்பங்களை கண்டு
ஓடினேன் அச்சத்தின் உச்சத்தில்

தூர கண்ட வெண் ஒளி
பெரியதாய் பெரியதாய் வளர்ந்தது
அடைந்தேன் அவ்விடத்தை
படர்ந்தது ஒளி என்னை சுற்றி

சிரித்தேன் அழுதேன் அந்த ஒரு நிமிடம்
இடம் புரியா இன்பம் அது
பயம் மறைந்த நிமிடம் அது
பெருமூச்சு விட்டேன் சற்றே கலைந்தது என் கனவு

ஓடினேன் உண்மை
இருள் உண்மை
பயம் உண்மை – இறுதியில்
இன்புட்றதும் உண்மை

ஓடினேன் வேகமாய் வாழ்கை வெளிச்சத்தை  நோக்கி
ஓடினேன் வேகமாய் எதிர் காலத்தை வெண் ஒளியை நோக்கி
ஓடினேன் வேகமாய் கடந்த கால இருளை கண்டு
ஓடினேன் வாழ்கையை வென்றுவிட

Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை