Skip to main content

உள்ளத்தின் ஆழ்குரல்


கவிதை எழுத தொடங்குகிறேன்
வார்த்தைகள் பஞ்சம்
என் வாழ்கை வரய தொடங்குரிறேன்
அதில் மனிதர்கள் பஞ்சம்

அன்னையும் தந்தையும் வாழ்வின் கர்த்தா
வெற்று காகிதத்தில் ஓர் கரி கோடு
ஒன்றுமே இல்லாத காய்ந்த நிலத்தில்
எதிர்பார்ப்போடு ஓர் விதை

வளரும் பயிரும் வரையும் ஓவியமும்
தன்னந்தனியே தேர் இழுக்காது
ஊர் கூடி வண்ணம் பூசி
உரம் போட்டு பெரியதாகும்

வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என்
வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என்
வாழ்வின் வண்ணம் எதுவோ – என்
வாழ்வின் உரம் எதுவோ



என்றுமே உபயகோகிக்கத அந்த
சின்னஞ்சிறு மூளையை
உருக்கி பொழிந்து யோசித்தேன் – இந்த
கேள்விக்கு பதில் அறிய

ஒரு நாள் விளங்கியது – ஆம்
நம் வாழ்வின் உரம் நட்பு
நம் வாழ்வின் நிறம் நட்பு
என் வாழ்வின் அர்த்தம அதுவே

ஆட்டம் பாட்டம் எல்லாம் நிறைய
வாழ்வின் மூலம் அறிந்த இன்பம்
தேடி ஓடி ஆடி பாடி
களித்தேன் இன்ப தேன்

களைப்பில் ஆய்ந்து மகிழ்ச்சியில் மலைத்து
சோர்ந்து வந்து அமரும் போது
சுற்றி சுற்றி பார்கிறேன் – என்
உரம் நிறம் எல்லாம் மறைந்தன



திராணி இருக்கும் வரை
நான் நினைத்த உரம் நிறம் அது வரை
தெம்பு இருக்கும் வரை
நான் நினைத்த வாழ்வின் மூலம் அது வரை

முதலில் தனிமை அது நகர்ந்தது
பின்பு பயம் அதுவும் பறந்தது
அதன் பின் வெறுமை சற்றே நிலைத்து
அ(இ)ன்று புரிந்தது என் வாழ்வின்  கரு

விதையும் பொழுதே உள்ளே இருக்கும் உரம்
வரையும் பொழுதே அதில் இருக்கும் நிறம்
உள்ளே இருக்கும் உள்ளத்திற்கு
அதுவே ஆகும் உரமும் நிறமும்

உள்ளது இன்னும் வார்த்தை பஞ்சம்
உரம் இல்லாததால் நடுங்குகிறது நெஞ்சம்
ஒரு நாள் வரும் என் வாழ்வில் வண்ணம்
அன்று முடிப்பேன் இக்கவிதையை – இது திண்ணம்









Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை