Skip to main content

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு
சண்டை சமரசம் சட்டை செய்யாது
தூரம் நேரம் வித்தியாசம் அரியது
விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு

வகுப்பறை காணாது என் முகம்
புத்தகம் பார்க்காது என் கண்கள்
தேர்வு வரும் முன்னே
உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான்

தேர்வு முடிந்த பின்னும்
என்னை விட ஓர் இரு மதிப்பெண்
குறைவாய் எடுத்து என்னை
ஊக்குவித்த உறவு நீ

கையில் சில்லறை இல்லாதபோதும்
புட் கோர்ட்டில் தாராளமாய்
அள்ளி அள்ளி எடுத்து
உண்டி கொடுத்த உறவு நீ

கல்லூரி கால நினைவுகளை
கணவாய் மறக்காது
நினைக்கும் பொழுதெல்லாம்
நிஜமாக்கும் உறவு நீ

அறிவியல் துறவியல் என்றவனை
ஆசை பற்பல காட்டி
தோள் தட்டி தூக்கிவெய்த்து
உண்மையான உறவு நீ

திசை மாறியது இரு நதியின் பாதை
நினைவுகள் ஆனது நிகழ்வுகள்
எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில்
இனிமை நிறைக்கும் உறவு நீ

Comments

Popular posts from this blog

நட்பு

தண்டவாளங்கள் இரண்டு எங்கோ சிறிது தூரம் ஒன்றாய் செல்லும் நட்பெனும் தண்டவாளங்களும் சேர்ந்து சென்றால் தான் நண்பர்கள் வாழ்க்கை பயணத்தின் அப்பகுதியை கடக்க முடியும் பிரியும் நேரம் வரின் தங்கள் பாதையை நோக்கி அவை பிரியும் ஒன்றாய் முழு நேரமும் இருக்க நினைத்தால் மாறி போகுமே அவற்றின் சேரிடம் நிலை எதுவும் இல்ல இருக்கும் வரை நட்பை போற்ற நினை மனமே பிரியும் நேரத்தில் பெரிதாய் வருந்தாதே பிரிவு உனக்கு மட்டும் அல்ல மற்றவருக்கும் நல்லதுவே!

நினைவுகள்

சுவர்கள் நான்கின் நடுவே தனியாய் இருத்தல் பயம் அல்ல நினைவுகள் வாழும் ஓர் அறையில் துணிந்து செல்ல முடியவில்லை நீ இருந்த இடம் இன்று காலியாய் இருக்கும் ஆனால் உன் பிம்பம்கள் என்னை வேலியை சுற்றி வருகிறதே உன் வாசம் மறையவில்லை உன் குரலின் எதிரொலி குறையவில்லை நான் பேசும் போதெல்லாம் உன் குரல் கேட்கிறதே நம் இனிமை நினைவுகளை நினைக்கிறன் என் கண்களில் காவிரி பெருக்க

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.