Skip to main content

கண்டுபிடி வித்தியாசங்களை


சுருசுருப்பின் மறு உருவமாம்
பணியே கண்ணாய் விளங்குமாம்
காலை முன்னே கிளம்புமாம்
சிறுக சிறுக சேர்க்குமாம் – தேனி??? மனிதம்???

வாழ்கை முழுதை ரசிக்குமாம்
உயர பறக்க நினைக்குமாம்
தன் குஞ்சை பொற்குஞ்சாய் போற்றுமாம்
கூர்மை எண்ணம் கொண்டதாம் – பறவை??? – மனிதம்???

வேணும் நிறம் பூசுமாம்
சேரும் வர்ணம் மாருமாம்
தன்னை காத்துக்கொள்ள வேண்டியே
மாறும் தன்மை கொண்டதாம் – பச்சோந்தி??? மனிதம்???

ஒட்டிய இடத்தை பற்றுமாம்
பிடித்த பிடியும் இரும்பாம்
குருதி மொத்தமும் உரிந்து எடுக்குமாம்
ரணம் காயம் எற்படுதுமாம் – அட்டை??? மனிதம்???

எத்தனை வர்ணம் எம்மனிதம்
எத்தனை முகங்கள் எம்மநிததிற்கு
எத்தனை ரகம் எம்மனிதம் நடுவில்
அத்தனையும் அறிந்தேன் என் நான்கு வருடத்தில்

Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை