Skip to main content

ராதிகா தவ விரஹே

விரக தாபம் வாட்டுதே - உன்தன்
நிழல் இன்றி இம்மரம் வாடுதே
உன் பார்வை அணைத்த இத்தேகம் - உன்தன் 
இதழ் அமுதின்றி காயுதே

மண்ணில் எழுதிய உன் பெயர்
காற்றில் எழுதியதார் போல் கரையுதே - என்
உள்ளில் நான் எழுதிய உன் பெயர்
பசுமரத்தாணி போல் ஊருதே

துணை இன்றி ஆடுகிறேன் தனிமை சூறாவளியில்
இலையுதிர் காலம் போல் நான் கிளை நுணியில்
காய்ந்து சருகாகி உயிர் மரிக்க துணிவேனோ
விழுந்தாலும் உன் காலடி அன்றி வேறேதோ


நீரில் விழுந்த எரும்பானேன்
என்னை கரையேற்றும் சருகவாயா
விரக முதலையின் வாயில் கஜம் நானோ
என்னை காக்கும் கஜேந்திரன் ஆவாயோ

என்ன பாவம் இப்பிறவியை பெறச்செய்தேனோ
உன்னை விட கருணை கொண்டவன் தருமனோ
உன் கரம் தழுவிய இத்தேகம்
உன் விரல் தொட நாடுதே

சலனம் இல்லா தனிமை சாகரம்
தோணியை வருவாய் கரை ஏற்ற
தனிமையில் மறக்கிறேன் என்னிலை ஆவேன்
என் நிலை அறியாயோ வேல் விழி மண்ணா!

Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை