Skip to main content

தேவதை

வான் மேக கூட்டங்கள் பாதை அமைக்க
நீ தரை இரங்கி வர உன் மனம் இசைக்க
மழை துளி யாவும் உன்னை வலிக்காமல் நனைக்க
உன் தலை துடைக்க என் வாசல் தேடி நடக்க
என்ன தவம் நான் செய்தேன் பேரழகே

மின்னல் வெட்டும் உன் புருவம் அசைந்தால்
வானம் இடிக்கும் நீ முகம் சுலிதால்
மழை தாளம் போடும் உன் கண் ராகத்தோடு பாடினால்
நானும் ஆடுகிரேன் உன் தேன் அமுத பேச்சினால்

உன் கொஞ்சல் பேச்சு என்னை மலைக்க வைக்கிறது
உன் மூச்சு என்னை சிலிர்க்க வைக்கிறது
உன் காதல் வார்த்தை என்னை சுகிக்க வைக்கிறது
உன் பார்வை ஒன்றே என்னை உயிர் வாழ வைக்கிறது

ஏங்கே இருந்தாய் இத்தனை நாளாய் என்னை உலுக்காமல்
என்ன செய்தாய் இத்தனை நாளாய் என்னை வதைகாமல்
என்ன நினைத்தாய் இத்தனை நாளாய் என்னை அல்லாமல்
என்றாவது யோசித்தாயா நான் என்ன செய்வேன் நீ இல்லாமல்??

Comments

Popular posts from this blog

வாழ்கையின் கோணங்கள்

எங்கெங்கோ பிறந்தவர்களை ஒன்று சேர்க்கும் தொடர்பேதும் இல்லாதவர்களை இணைக்கும் நடமாடும் வேலை தன்னில் பாதையை மறைக்கும் கால்கள் சோர்வடையும் பொது புதிய பாதை தோன்றும் உணர்வுகள் இல்லாதவருக்கும் காதல் தாக்கும் ஆசை பாசம் இருப்பவருக்கும் உண்மை நட்பு கூட கிடைக்காது பணம் இருப்பவனிடம் திறமை இருக்காது திறமை இருப்பவனிடம் பணம் இருக்காது உறவு பிரியனிடம் பணம் இருக்கும் பணப்பிரியனிடம் உறவு நிலைக்காது இவை எல்லாம் வாழ்கையின் கோணங்கள்!! எந்நேரமும் எதுவாயினும் நடப்பின்’ கவலை கொல்லாதே மனமே இன்றொரு சந்தர்பம் போயின் பின்னொரு நாள் மற்றொன்று வந்து சேரும் பி. கு. தேர்வு அறையில் யோசித்து கொண்டு இருந்த பொது உதயமானது இந்த சிந்தனை. எப்படி படித்து சென்றாலும் எனக்கு தெரிந்த கேள்விகளே வருவதில்லை. வாழ்கை கற்றுதந்த பாடம்.

அடுத்து என்ன??

கடிகார முட்கள் இரண்டும் இன்று போட்டி போட்டு ஓடியது வகுப்பறையில்  மட்டும் ஏனோ இந்த ஆமை வேகம் பரிட்சைக்கு முன் இரவு என் எழுத்தரையில் மடி  கணினியில் காண்கிறேன் படுக்கை அறையில் உயிர்  குறில் இரண்டும் என் தலையில் வல்லின மெய்யோடு சேர்வது நான் என்று வாக்கு வாதம் செய்ய இறுதியில் உகரம் ஜெயித்தது- செல்கிறேன் படுக்க

முதுமை

முதுமை - வாழ்க்கையின் கேட்க்கா வரம் முதுமையில் தனிமை - வரம் என்னும் சாபம்   ஊமை பகலும் தனிமை இரவும் கடக்கும் தெம்பு உடலில் இல்லை ஊணும் வற்றி ரத்தம் சுண்டி சுமக்கும் வலுவும் மனதில் இல்லை முழங்கை மெதுவாய் மேலெழுப்பும் சத்து உடலில் குறைவு தான் இருப்பிலிருந்து மேலெழ பிடிப்பு ஒன்று தேவை தான் கூடி வாழ்ந்த காலத்தை நினைவு கூறும் தனிமை இது ஓடி ஆடிய நாட்களை நினைத்து பார்க்கும் வயது இது மௌனம் சூழும் நிமிடம் எல்லாம் மனதில் எதிர் ஒலிக்கும் சத்தங்கள் நாள் முழுவதும் நீடித்தாலும் பகலும் இறவென்று சாதிக்குமே உடல் வலியை போக்கவா மன வலியை ஆற்றவா யோசித்து கொண்டே நகருகையில் கண்களும் கசியுமே !!