Skip to main content

எது நிலை??


வானவில் தோரணங்கள்
தேனமுது கீதங்கள்
கை நிறைக்கும் பொன்னும்
மனம் நிறைக்கும் பொருளும்
வாய் நிறைக்கும் உணவும்
இடம்  நிறைக்கும் உறவும்
என்றும் நிலையல்ல!

பாறை வழியும்
முட் பயணனும்
துயர் இருளும்
தனிமை அறையும்
வற்றும் பசியும்
உருக்கும் தாபமும்
உறுத்தும் மன கணங்களும்
என்றும் நிலையல்ல!

இந்த நிமிடம் உண்டு
இந்த நொடி உண்டு
மனம் நினைப்பது உண்மை
மற்றவரிடம்  எதிர் பார்ப்பது மடமை

நிலைப்பது  சில
அவற்றுள்
உணர்வுகள் நினைவுகள் பிரதானம்

வாழ்கை முழுவதையும் யோசித்து
மலைத்து சிரமப் படுவதை விட

இந்த நொடியை மட்டும் வாழ்ந்து
இன்பப்படுவது மேல்...
அத்தனைக்கும் ஆசை படலாம்
ஆனால் அவை நிலைப்பது கடினம்

Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை