Skip to main content

காற்றில் மிதந்தேன்

காற்றில் மிதந்தேன்
வானூர்தியில் கடல் தாண்டி
காற்றில் மிதந்தேன்
நான் விதைத்த ரோஜாவை பார்க்க

காற்றில் மிதந்தேன்
கடல் தாண்டி என் கண்மணியை காண
காற்றில் மிதந்தேன்
நான் சுமந்த உயிரை தழுவ

கற்பணயில் கண்ட அந்த முகத்தை
கனவில் கேட்ட அந்த குரலை
நினைவில் கொண்ட அந்த புன்னகையில்
காண மண்ணில் இறங்கினேன்

அந்த முகம் அதே புன்னகை
அதே மினுக்கும் கண்கள்
மேலும் வளர்ந்த என் கன்று- இன்று
சான்றோர் போற்றும் பூ சென்று

சொல்ல தெரியா இன்பம்
இதயம் கொள்ளாத மகிழ்ச்சி
மடை திறந்ந்த வெள்ளம் போல்
பொங்கி வரும் பாசம்

அடக்க முடியாத கண்ணீர்
செய்வதரியாது நின்றேன்
அன்று புரியவில்லை அதன் அர்த்தம்
ஈன்ற பொழுதின் இன்பம்

இன்று உணர்ந்தேன்
ஈன்ற பொழுதின் பெற்ற இன்பத்தினை
கண்டேன் என்னுள் வளர்ந்த உயிரை
காற்றில் மிதந்தேன்







Comments

Popular posts from this blog

அனாதை

கவிதையில் பாடினால் என்ன கதையில் வடித்தால் என்ன உள்ளம் படும் வலியை புரிய வைப்பது கடினம் நேசம் அன்பு பண்பு எல்லாம் கோவத்தின் நிழலினிலே அன்பும் அபிமானமும் வேண்டாம் ஆனால் மனிதாபிமானம் வேண்டாமா உன் இதயம் நிமிடத்தில் நூறு முறை துடித்தாலும் என் கடுமையும் கோபமும் உன் மேல் குறையாது இது இன்றைய உலகின்   அன்பு இதை நடத்தும் மனிதம் உண்டு எங்கே மறைந்தது பாசம் எங்கே தொலைந்தது பண்பு எங்கே சிதைந்தது நேசம் இங்கே மறைந்தது அன்பு சுற்றுச்சூழலின் மாசு விலகலாம் நதி நீர் எல்லாம் ஒன்று சேரலாம் செல்வமும் சிறப்பும் பெருகி நிரயலாம் மனிதம் ஆகுமே அனாதையாய்

பால் அரியா உறவு

பால் அரியா ஒரே உறவு சண்டை சமரசம் சட்டை செய்யாது தூரம் நேரம் வித்தியாசம் அரியது விதிகள் இல்லா ஓர் உறவு - நம் நட்பு வகுப்பறை காணாது என் முகம் புத்தகம் பார்க்காது என் கண்கள் தேர்வு வரும் முன்னே உன் மிரட்டலுக்கு ஒடுங்குவேன் நான் தேர்வு முடிந்த பின்னும் என்னை விட ஓர் இரு மதிப்பெண் குறைவாய் எடுத்து என்னை ஊக்குவித்த உறவு நீ கையில் சில்லறை இல்லாதபோதும் புட் கோர்ட்டில் தாராளமாய் அள்ளி அள்ளி எடுத்து உண்டி கொடுத்த உறவு நீ கல்லூரி கால நினைவுகளை கணவாய் மறக்காது நினைக்கும் பொழுதெல்லாம் நிஜமாக்கும் உறவு நீ அறிவியல் துறவியல் என்றவனை ஆசை பற்பல காட்டி தோள் தட்டி தூக்கிவெய்த்து உண்மையான உறவு நீ திசை மாறியது இரு நதியின் பாதை நினைவுகள் ஆனது நிகழ்வுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் - என் மனதில் இனிமை நிறைக்கும் உறவு நீ

காலை

வெண் மேக கூட்டங்கள் காற்றில் படர பால் நுரை கூட்டங்கள் என் வடிநீர் கோப்பையில் நகர அதனை உறிஞ்சும் போது கிடைக்கும் மலர்ச்சி தேனி கூட்டங்களும் தோற்குமே - என்னுடன் சுறுசுறுப்பில் போட்டி போட்டால் எரும்புகளும் நின்று பார்க்குமே என் புத்துணர்ச்சி அலையை